Tuesday, 20 October 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 331.13 ▲ 0.03%
  • EUR 371.75 ▲ 0.04%
  • GBP 441.31 ▲ 0.09%
  • CAD 234.91 ▲ 0.45%
  • AUD 231.11 ▲ 0.46%
  • INR 3.49 ▲ 0.09%
  • CHF 400.96 ▼ 0.04%
  • AED 90.16 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-10-20 22:01

இலங்கையின் நம்பர் 01 தமிழ் செய்திப் பத்திரிகை

இலங்கை வானிலை
26°C
யாழ்ப்பாணம்
இடி மின்னலுடன் மழை
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 95%
  • காற்று 3 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 25°
  • திருகோணமலை 24°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு: முதலாவது நிபுணர் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன” விண்ணாங்கம்பிட்டி மீள்குடியேற்றம் மற்றும் ஏம்பைக்குளம் மின்னிணைப்பு தொடர்பில் ரவிகரன் எம்.பியிடம் மகஜயர் கையளிப்பு சாய்ந்தமருது 19ஆம் வட்டார 04ஆம் பிரிவுக்கான மகளிர் ஒன்றுகூடல்  “ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் ஆட்சியை மாற்றலாம் என எக்னெலிகொட கூறினார் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அரசாங்கம் மதித்து நடக்கும்: ஜனாதிபதி தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு
மலையக செய்திகள்

அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி

பகிர்FacebookWhatsAppXTelegram

அலவத்துகொட – அக்குரணை, குருக்கொட 7ஆம் கட்டை அருகில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாகக்  கண்டி  தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அலவத்துகொடப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. இதனால், குறித்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அலவத்துகொடப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சிமெந்து ஏற்றிச் சென்ற பவுசர், பல வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் இந்த விபத்தினால் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.