செவ்வாய், 29 செப்டெம்பர் 2026 இலங்கை 5:41 AM
நேரலை புதிய குரல் வானொலி 24 மணி நேர தமிழ் இணைய வானொலி
இலங்கை வானிலை
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
—°C
உடனடி
அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு 22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் ஆறுதல் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்..ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’
விளம்பரம்விளம்பரம்
நினைவேந்தல்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி

பாலநாதன் சதீசன் 

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் 

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாளான இன்று பிலக்குடியிருப்பு பகுதியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கிராம மக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு திலீபனின் நினைவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்தோடு குறித்த நிகழ்வில் அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

பகிருங்கள் WhatsAppFacebookXTelegram
நேரலை புதிய குரல் வானொலி 24 மணி நேர தமிழ் இணைய வானொலி