ஞாயிறு, 18 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
சந்தியாவுக்கு எதிராக தீவிரமடையும் வெறுப்புப் பிரச்சாரம் தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு நெல்லிமலையில் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு!
விளம்பரம்விளம்பரம்
மலையக செய்திகள்

நெல்லிமலையில் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டது

கண்டி, பன்விலை, நெல்லிமலை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12) பிற்பகல் முதல் மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்த கடும் மழை காரணமாக, அப்பிரதேசத்தில் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டிருந்த பாலம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாடசாலை வருகையும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தித்வா புயலினால் நெல்லிமலை பிரதேசத்தில் அமைந்திருந்த சுமார் நூறு வருடங்கள் பழமையான இரும்புப் பாலம் முன்னதாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதேச மக்களும் தோட்ட நிர்வாகமும் இணைந்து தற்காலிகமாகப் பாலத்தைப் புனரமைத்திருந்தனர். எனினும், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்ட இந்தப் பாலம் தொடர்ந்து பெய்த கடும் மழையினால் அவ்வப்போது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகி வந்தது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12) பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, பாலம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லிமலை அரசப் பெருந்தோட்டம் மற்றும் சோலங்கந்தை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்திற்குக் கல்வி கற்க வரும் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நெல்லிமலை தனியார் தோட்டத்திற்குச் செல்லும் மற்றுமொரு பாலமும் சேதமடைந்துள்ளதால், அப்பிரதேசத்திற்கான போக்குவரத்தும் அபாயகரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பாலங்களை விரைவாகப் புனரமைத்து, பிரதேச மக்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்