ஞாயிறு, 18 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
சந்தியாவுக்கு எதிராக தீவிரமடையும் வெறுப்புப் பிரச்சாரம் தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு நெல்லிமலையில் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு!
விளம்பரம்விளம்பரம்
மலையக செய்திகள்

தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு

சுரேஷ்ராஜரத்தினம்

  ஹப்புத்தளைப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, ஹப்புத்தளை நகரின் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஹப்புத்தளை – தம்பேத்தென்ன வீதியின் கெல்பன் பகுதியில், இரண்டாவது கிலோமீற்றர் மைல்கல் அருகே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், அவ்வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படுவதால், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, மண்சரிவு ஏற்பட்டுள்ள வீதிப் பகுதியைக் கடந்து செல்லும்போது அவதானமாகச் செயற்படுவதுடன், சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்

தொடர்புடைய செய்திகள்