ஞாயிறு, 18 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அரசாங்கம் மதித்து நடக்கும்: ஜனாதிபதி தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு நெல்லிமலையில் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அள்ளுண்டது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு!
விளம்பரம்விளம்பரம்
முக்கிய செய்தி

உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அரசாங்கம் மதித்து நடக்கும்: ஜனாதிபதி

உயர் நீதிமன்றம் உட்பட நீதித்துறையினால் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசாங்கம் உறுதியாக மதித்து நடக்கும் என்றும், அந்தத் தீர்ப்புகளுக்கு அப்பால் சென்று எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை(18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

“தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, கடந்த காலங்களில் சலுகைகளையும் சட்டப் பாதுகாப்பையும் அனுபவித்து வந்தவர்கள், தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

பாராளுமன்றமே சட்டங்களை இயற்றுகின்றது; அச்சட்டங்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களமும், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் வழக்குகளைத் தாக்கல் செய்கின்றன. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்; இறுதியாக நீதித்துறை அது தொடர்பான தீர்ப்புகளை வழங்கி தீர்மானிக்கின்றது.

உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், சிலர் ‘இல்லை, அதை ஒதுக்கி வையுங்கள்’ என்று கூச்சலிடத் தொடங்குகிறார்கள். அவ்வாறு நடந்தால் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கும்?

சில குழுக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்தால், ஒரு நாட்டை ஒருபோதும் கொண்டு நடத்த முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை உரிய நிறுவனங்களிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதுடன், நீதித்துறை எட்டும் முடிவுகளையும் மதித்து நடக்கின்றது.

நாம் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்படுகிறோம்; அதற்கு அப்பால் சென்று வேறு எந்த முடிவுகளையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்