வியாழன், 1 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு! சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர் அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள் செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்
விளம்பரம்விளம்பரம்
தமிழ்நாடு

முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு!

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் சதீஷ் இன்று (30) மாலை நேரில் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார். 

இந்த விஜயத்தின் போது முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளை நேரில் சந்தித்த ஆணையாளர், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து இந்தியாவுக்குச் சென்றவர்களில் சிலர், மீண்டும் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து இதன்போது மனு கையளித்தனர். 

அத்துடன், முகாமில் வசிக்கும் தமக்கு அடையாள அட்டைகளை வழங்கி அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து தருமாறு அகதிகள் கோரிக்கை விடுத்தனர். 

அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளைப் பெறுவதிலும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். 

மேலும், நீண்ட காலமாக முகாமில் பதிவிலுள்ள தமக்கு விசேட தணிக்கை மற்றும் விடுமுறை பெறுவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்து நிரந்தர மின் ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அத்துடன், இரவு வேளைகளில் முகாமின் நுழைவாயிலில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டன. 

இதேவேளை, இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் ஊடாக அறிக்கை பெறப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அத்துடன், முகாமின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் தாம் தொடர்ச்சியாகக் அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்