கனடா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை: சாத்தியக்கூறு மிகக் குறைவு – முன்னாள் படைத்தளபதி Wayne Eyre தகவல்!
கனடா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு (Extreme Tail Risk) என கனடாவின் முன்னாள் படைத்தளபதி (Retired General) Wayne Eyre தெரிவித்துள்ளார்.
தனது “Into the Breach: A Soldier’s Journey” என்ற சுயசரிதை புத்தகத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் Donald Trump கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து, இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகள் குறித்து தாம் பரிசீலித்ததாகப் பிரதமர் Mark Carney The New York Times நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கே முன்னாள் தளபதி Wayne Eyre பதிலளித்துள்ளார்.
Donald Trump-ன் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியதிலிருந்து கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
, அமெரிக்கா அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்குள் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படும் என தாம் நம்புவதாக Donald Trump தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
