செவ்வாய், 29 செப்டெம்பர் 2026 இலங்கை 5:41 AM
நேரலை புதிய குரல் வானொலி 24 மணி நேர தமிழ் இணைய வானொலி
இலங்கை வானிலை
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
—°C
உடனடி
அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு 22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் ஆறுதல் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்..ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’
விளம்பரம்விளம்பரம்
பிரதான செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை  வளாகத்தில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 


வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

வெடிப்பு காரணமாக அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டபோதிலும், வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எனினும், விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பகிருங்கள் WhatsAppFacebookXTelegram

தொடர்புடைய செய்திகள்

நேரலை புதிய குரல் வானொலி 24 மணி நேர தமிழ் இணைய வானொலி