Thursday, 22 October 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 331.90 ▲ 0.07%
  • EUR 372.58 ▲ 0.04%
  • GBP 444.25 ▲ 0.27%
  • CAD 235.90 ▲ 0.02%
  • AUD 232.99 ▲ 0.51%
  • INR 3.51 ▲ 0.53%
  • CHF 402.09 ▲ 0.08%
  • AED 90.33 ▲ 0.04%
புதுப்பிப்பு: 2026-10-22 17:44

இலங்கையின் நம்பர் 01 தமிழ் செய்திப் பத்திரிகை

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 33°
  • ஈரப்பதம் 92%
  • காற்று 7 km/h
  • கொழும்பு 26°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 25°
அண்மைச் செய்திகள்
யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட ஒன்றிணைவோம் – அருட்தந்தை மா. சத்திவேல் அழைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல் தமிழ் நூல்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கும் சுங்கம் படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன், வடக்கில் நினைவுகூரப்பட்டார் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு: 35 குடும்பங்களின் சட்டத்தரணியாக முபாறக் முஅஸ்ஸம் நியமனம் அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு: முதலாவது நிபுணர் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன” விண்ணாங்கம்பிட்டி மீள்குடியேற்றம் மற்றும் ஏம்பைக்குளம் மின்னிணைப்பு தொடர்பில் ரவிகரன் எம்.பியிடம் மகஜயர் கையளிப்பு சாய்ந்தமருது 19ஆம் வட்டார 04ஆம் பிரிவுக்கான மகளிர் ஒன்றுகூடல் 
மனித உரிமைகள்

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட ஒன்றிணைவோம் – அருட்தந்தை மா. சத்திவேல் அழைப்பு

பகிர்FacebookWhatsAppXTelegram

பாலநாதன் சதீசன்

செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல், தமிழ்த் தேசிய மற்றும் சமூக சக்திகள் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (21.10.2026) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி சித்து பாத்தி சமூக புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களால் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் “தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு காரணமாக இறந்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளமை உண்மையை எதிர்பார்த்து தசாப்தங்களாக காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், நீதியை எதிர்பார்த்திருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் வியப்பில்லை. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்திடமிருந்தும் இதனை விட வேறு ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது என்பதோடு; பேராசிரியரின் அறிக்கையானது சர்வதேச தலையீட்டை கோரும் தமிழர்களின் நியாயமான நிலைப்பாட்டுக்கு போதுமான சான்றாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பாடசாலை மாணவி கிருஷ்ணாந்தி குமாரசாமி கொலை வழக்கின் குற்றவாளியான கோப்ரல் சோமரத்தின ராஜபக்ச “செம்மணி தொடர்பாக மேலும் பல உண்மை தகவல்கள் கொடுப்பேன் என்னை விசாரணைக்கு அழையுங்கள்”எனக் கூறி பல கடிதங்களை பல மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதிக்கு அனுப்பியும் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை. 

இச்சாட்சி “கொல்லப்பட்டவர்களை நாமே புதைத்தோம்” என கூறுவதோடு இக் குறிப்பிட்ட சாட்சி உயிரோடு இருக்கையிலேயே பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்கள் இறப்பு தொற்றுநோய், இயற்கை பேரழிவு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பான சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கலந்த சிந்தனை வெளிப்பாடு எனவும் கூறலாம்.

அத்தோடு செம்மணி சமூக புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களுக்கு அப்பால்  சிறு பிள்ளைகளின் பாவனை பொருட்களோடு மேலும் பல சான்று பொருட்கள் கொலை கொடூரத்தை வெளிப்படுத்துகையில்  இனப்படுகொலையை மூடி மறைக்கவும், படையினரை பாதுகாக்கவும் எடுத்திருக்கும் முயற்சியாகவே பேராசிரியரின் அறிக்கையை உற்று நோக்குவதோடு இதற்குப் பின்னால் அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம்.

சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாத படைகளால் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், வலிந்து காணமலாக்கப்பட்டமை. என்பவற்றிற்கான  நீதி இதுவரை கிட்டாது மட்டுமல்ல மாற்றம் எனக் கூறி தமிழர்களின் வாக்குகளையும்  சூறையாடிய தேசிய மக்கள் சக்தியிடமோ இனி வரும் வேறு எந்த அரசாங்கத்திடமோ இருக்கப்போவதில்லை என்பதையும் நாம் அறிவோம்.

அவர்கள் சர்வதேசத்தை சமாளிக்கவும், ஏமாற்றவும் நியமிக்கும் ஆணை குழுக்களாலும், கொடுக்கும் வாக்குறுதிகளாலும் சுய இலாப அரசியல்வாதிகளும் சர்வதேசமும் தொடர்ந்து ஏமாற்றப்படலாம்.இதுவரை அதுவே உண்மை. 1983 கருப்பு ஜூலை இனப்படுகொலை மீள் விசாரணைக்கும் அதுவே நடக்கும்.

இந்நிலையில் தமிழ் தேச அரசியல் சக்திகளும்,சமூக சக்திகளும் கூட்டாக சர்வதேச கதவுகளை பலமாக தட்ட வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின்  ஏமாற்றம் அளிக்கும் அறிக்கை எம்மை வேகமாக வந்து தள்ளுகிறது.

இந்நிலையில் அமைதி காப்பது என்பது அரசியல் சமூக புதைகுழிக்குள் நம்மை நாமே வீழ்த்துவதாகவே அமையும்.

இதனின்று  மீழும் சமூகமாக மாவீரர் மாதத்தில் செம்மணி தொடரில் அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது தமிழ் தேச சக்தியாக ஒன்று திரள்வோம். மீண்டும் சர்வதேச நோக்கி எமது குரலை உயர்த்தி எம் பலத்தை வெளிப்படுத்துவோம். தேசத்திலும் புலத்திலும் அதற்கான மக்கள் சக்தியை திரட்டுவதே இன்றைய எமது கடமையும் பொறுப்புமாகும்.