நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் போராட்டங்களை எதிர்கொள்ளப் பிரான்ஸ் அரசாங்கம் உச்சக்கட்டத் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் 70,000 காவற்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் (gendarmes) பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனேஸ் (Laurent Nuñez) தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நாளைய போராட்டங்களில் பிரான்ஸ் முழுவதும் சுமார் 4 இலட்சம் முதல் 5 இலட்சம் (400,000 – 500,000) வரையிலான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் என அதிகாரிகள் கணிக்கின்றனர்.
பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ‘மஞ்சள் ஆடையினர்’ (gilets jaunes) எனப் பல தரப்பினரும் இந்தப் போராட்டங்களில் ஒன்றிணைந்துள்ளனர். ஒருபுறம் மக்களின் சமூகக் கொந்தளிப்பு, மறுபுறம் நகர்ப்புற வன்முறைகள் எனப் பிரான்ஸ் நாடு பெரும் பதற்றத்திற்கு இடையே சிக்கித்தவிக்கிறது.



