Friday, 23 October 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.01 ▲ 0.03%
  • EUR 372.44 ▼ 0.04%
  • GBP 444.44 ▲ 0.04%
  • CAD 236.74 ▲ 0.36%
  • AUD 232.77 ▼ 0.09%
  • INR 3.51 ▼ 0.25%
  • CHF 403.39 ▲ 0.32%
  • AED 90.40 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-10-23 18:31

இலங்கையின் நம்பர் 01 தமிழ் செய்திப் பத்திரிகை

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 30°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 18 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
அம்பாறை

ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு!

Puthiya Kural AI Summary – Quick Read

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை உடைத்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி யு.பி. வேனடி என்பவருக்குச் சொந்தமானதாகத் தெரிவிக்கப்படும் வயல் காணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், அவர் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளார்.

குறித்த வயல் காணியில் இனந்தெரியாத நபர்களால் இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான தடயங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த வயல் காணியில் அமைந்துள்ள மாமரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், அந்தச் சிலையும் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வயல் காணியைப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டமை, பிள்ளையார் சிலை உடைத்து அகற்றப்பட்டமை மற்றும் அப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படும் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.