Friday, 23 October 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 332.01 ▲ 0.03%
  • EUR 372.44 ▼ 0.04%
  • GBP 444.44 ▲ 0.04%
  • CAD 236.74 ▲ 0.36%
  • AUD 232.77 ▼ 0.09%
  • INR 3.51 ▼ 0.25%
  • CHF 403.39 ▲ 0.32%
  • AED 90.40 ▲ 0.08%
புதுப்பிப்பு: 2026-10-23 18:31

இலங்கையின் நம்பர் 01 தமிழ் செய்திப் பத்திரிகை

இலங்கை வானிலை
27°C
யாழ்ப்பாணம்
மேகமூட்டம்
  • உணர்வு 30°
  • ஈரப்பதம் 90%
  • காற்று 18 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 26°
  • திருகோணமலை 25°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு! நாளை (24.10.2026) மாபெரும் போராட்டம்: நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிப்பு! பாரிஸில் வசிக்கும் விசா இல்லாதவர்களும் உதவி பெறக்கூடிய முக்கிய இடங்கள்! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் – கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் உரை! சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு! வயலில் உயிருக்குப் போராடும் யானை-பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி! செம்மணி மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச தலையீடு அவசியம் – அமைச்சர் ஆனந்த சங்கரி யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
அம்பாறை

சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல்: முதல் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது

Puthiya Kural AI Summary – Quick Read

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசலில், இன்று…

WhatsApp Facebook X Telegram
பகிர்FacebookWhatsAppXTelegram

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசலில், இன்று (23) வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ உரையும் தொழுகையும் நடைபெற்றன.

குறித்த பள்ளிவாசல் கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் ஒன்பது ஜும்ஆ பள்ளிவாசல்கள் இயங்கி வந்த நிலையில், மல்கம்பிட்டி பள்ளிவாசல் இணைக்கப்பட்டதன் மூலம் இவ்வெண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ உரையையும் தொழுகையையும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.ஏ. றம்சின் காரியப்பர் நடத்தினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பல்வேறு பள்ளிவாசல்களின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசல் ஜும்ஆ பள்ளிவாசலாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், அப்பகுதி மக்களுக்கான வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, மல்கம்பிட்டி பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையைத் தமது பகுதியிலேயே நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது